இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
மதுபானசாலைகள் திறக்கும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.