2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முடிவு ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2,888 நிலையங்களில் மூன்று இலட்சத்து 37,591 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.