Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (15) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles