டீசல் திருட்டு சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரயில் ஊழியர்கள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் ரயில் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 05 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அனுராதபுரம் ரயில் நிலையத்தில் 545 லீற்றர் டீசல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ரயில்வே பொது மேலாளரால் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.