Sunday, January 18, 2026
23 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் - ஜனாதிபதி

கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும்.

அரசியலை விடுத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றுத்திற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதே எனது நோக்கமாகும்.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் போக்கை மாற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் – என்றும் ஜனாதிபதி கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles