Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களே பொறுப்பு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களே பொறுப்பு – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் பலர் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைள் மீறப்பட்டுள்ளதாகவும் நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன உள்ளிட்ட குழுவினால் இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த பின்னரே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles