Friday, December 12, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரமிட் திட்டத்தில் சிக்கிய இளைஞன் சடலமாக மீட்பு

பிரமிட் திட்டத்தில் சிக்கிய இளைஞன் சடலமாக மீட்பு

பாணந்துறை – ஹொரைதுடுவ பிரதேசத்தில் பொல்கொட ஆற்றில் இருந்து இன்று (14) காலை நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பாணந்துறை – பரத்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் சிங்கள ஆசிரியராக பணியாற்றிய குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு 7.00 மணியளவில் மொரட்டுவ – திகரொல்ல பலமவிற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தனது பையை வைத்து விட்டு பாலத்தை நோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமை குறித்த இளைஞன் ஆற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர் பிரமிட் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை இழந்ததால் மனமுடைந்து இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles