Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல ரயில் சேவைகள் பாதிப்பு

பல ரயில் சேவைகள் பாதிப்பு

இயந்திர கோளாறு காரணமாக இன்று காலை முதல் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை களுத்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், இயந்திர கோளாறு காரணமாக சிலாபத்தில் இருந்து பாணந்துறை வரை பயணிக்கும் ரயில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.40க்கு பெலியத்த நோக்கி புறப்படவிருந்த ரயில் சேவையும் தாமதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles