8 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மினுவாங்கொடை பொலிஸாரால் நேற்று (13) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை – மிரிஸ்வத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (12) திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெண் தனது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்து, முறைப்பாட்டாளரின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் தனது கணவருடன் இணைந்து கடந்த 12ஆம் திகதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருட்டைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான 26 மற்றும் 33 வயதுடைய கணவன் மற்றும் மனைவி மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.