Wednesday, December 10, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி ஐஸ் விற்றவர் கைது

போலி பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி ஐஸ் விற்றவர் கைது

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டையுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் – தெலியகொல்ல தேவாலயத்திற்கு அருகில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குருணாகல், தொரடியாவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து ஒரு கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் 2020 செப்டெம்பர் 9 ஆம் திகதி பொலிஸ் கான்ஸ்டபிளாக பொலிஸ் திணைக்களத்தில் சேர்ந்ததாகவும், திருட்டு சம்பவம் காரணமாக 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தன்னிடம் இருந்த போலி பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குருணாகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles