Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதீட்டின் முக்கிய முன்மொழிவுகள்

பாதீட்டின் முக்கிய முன்மொழிவுகள்

தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவுதல்

தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவுதல்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும்.

சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 04 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

கல்வி சீர்திருத்தங்கள் முழுமையான செயல்படுத்தப்படும். அந்த சீர்திருத்தங்கள் மூலம், தேசிய உயர்கல்வி பேரவை, தேசிய உயர்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறையொன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழுவொன்று நிறுவப்படும். அந்த கட்டமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்க 10 பில்லியன் ரூபாவும் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும்.

நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும்.

பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு.

2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறையொன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழுவொன்று நிறுவப்படும். அந்த கட்டமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.

பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பிம் சவிய வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்க 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு.

நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும்.

கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.


  • அரச பணியாளர்களுக்கான சம்பள பிரச்சினை முக்கியம் – அதனால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – நிலுவைச்சம்பளமும் விரைவில் வழங்கப்படும்.
  • ஓய்வூதியச் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பு –
  • பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு
  • அரச பணியாளர்களுக்கு முன்னரைப்போன்று இடர்கால கடன் மீண்டும் வழங்கப்படும்.
  • அஸ்வெசும நிவாரணத்திற்காக மும்மடங்கில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – அநீதி இடம்பெற்ற குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் .சமுர்த்தி பணியாளர்களின் உதவியும் பெறப்படும்.அங்கவீனமுற்றவர்களுக்கு 7500 ரூபாவும் , முதியோர்களுக்கு 3000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படும்.
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உதவித்தொகை அதிகரிப்பு
  • நிவாரணக்கடன்களுக்காக விசேட ஏற்பாடுகள் .சிறு நடுத்தர வர்க்க கைத்தொழில்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளின் காணி பிரச்சினையை தீர்க்க விசேட கொள்கை.அரச காணிகளை பயன்படுத்த தீர்மானம்
  • அரச தொடர்மாடிகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் உரித்தாகும்.அவர்களிடம் இனி வாடகை அறவிடப்படமாட்டாது.

*பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்க நிதி ஒதுக்கீடு

  • மலைநாட்டு பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு
  • மலைநாட்டு பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு
  • விசேட திட்டங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம் .அரச நிதி கட்டுப்பாடு உட்பட வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.
  • வீதிகள் ,புனரமைக்க புனரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • கல்வி மறுசீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு – அதற்காக விசேட திட்டம் வகுப்பு
  • உயர்தர வகுப்பில் சித்தியடையும் மாணவர்களுக்கு விசேட செயற்திட்டங்கள்.புதிய நான்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
  • அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபா அரசு செலவிடும்.
  • பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்களை அமைக்க விசேட நிதி ஒதுக்கீடு.அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைக்க சட்டத்தில் திருத்தம் செய்து இடமளிப்பு
  • வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர் கல்விக்கடன் – தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக்கூடிய ஏற்பாடு
  • பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு – அவர்களுக்கு விசேட பயிற்சியளிக்க நிதி ஒதுக்கீடு
  • அனைவருக்கும் பாடசலைகளில் விசேட ஆங்கிலக்கல்வி திட்டம் அறிமுகம் – மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும் அறிமுகம்.

*மருத்துவத்துறை பதவியுர்வுகள் ,இதர நிர்வாக செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள திட்டங்கள்

  • உள்நாட்டு மருத்துவத்துறையை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம் – சர்வதேச மட்டத்தில் அதனை கொண்டு செல்ல நடவடிக்கை .அதற்கான முதலீடுகளுக்கும் வசதி .100 மில்லியன் அதன் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு.
  • விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள்.இதற்காக தனியாரும் இணைக்கப்படுவர்.2500 மில்லியன் ரூபா இவற்றுக்காக ஒதுக்கீடு.பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை.அதற்காக சட்டத்திருத்தம்.அரச காணிகளில் 300 ஏக்கர் கனியும் இதற்காக ஒதுக்கீடு.
  • மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பால்பண்ணையாளர்களுக்கு விசேட திட்டங்கள் – பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள்

  • கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்கள் – அவர்களுக்கு அரச காணிகளை வழங்க திட்டம்.நிர்மாணப்பணிகளுக்கு விசேட உதவித்திட்டங்கள் – வீடமைப்புத் திட்டங்களை வழங்கி நிர்மாணத்துறையினருக்கு ஊக்குவிப்பு
  • துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்.திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை
  • வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • காணாமல் போனவர்கள் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு
  • வடக்கு குடிநீர் விநியோக திட்டங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு
  • பூநகரி அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • பண்டாரவளை பொருளாதார நிலையம் அமைக்க திட்டம் – 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • மகா விகாரை பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் – அதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விசேட ஜனாதிபதி செயலணியும் அமைக்கப்படும்
  • பௌத்த வரலாறை கூறும் நூலகம் அனுராதபுரத்தில் அமையும் – அதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • கிரிக்கெட் மேம்பாட்டிற்கு விசேட திட்டங்கள்.பாடசாலை ,மாகாண மட்டத்தில் அபிவிருத்தி செய்ய விசேட நிதி ஒதுக்கீடு.
  • கண்டி நகரில் உலக வங்கியின் உதவியுடன் நகர அபிவிருத்தி திட்டம்.
  • பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களையும் நகரங்களையும் இணைக்கும் விசேட திட்டம்
  • அமைச்சுக்கள் திணைக்களங்கள் , தாபனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட விசேட வழிகாட்டி அமைக்கப்படும்.
  • ஹிங்குரக்கொடை சர்வதேச விமான நிலையத்தை அமைக்க 2 பில்லியன் ஒதுக்கீடு
  • அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க விசேட திட்டம்

*இரத்தினக்கல் வர்த்தகத்தை மேம்படுத்த விசேட திட்டங்கள்

  • திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதிகளை அபிவிருத்தி செய்ய திட்டம் .இந்திய முதலீட்டாளர்கள் இணைந்து ஆரம்பிக்க நடவடிக்கை.அதற்காக விசேட ஜனாதிபதி செயலணி
  • வங்கியில் கணக்கு வைப்பாளர்கள் நலன்கருதி விசேட திட்டங்கள்
  • வங்கிச் சட்டங்கள் மறுசீரமைப்பு
  • சிறு .நடுத்தர வர்க்க கைத்தொழிலாளர்கள் நலன்கருதி விசேட கடன் வசதிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles