Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுகைக்காசை செலவழித்தாவது இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவேன்

கைக்காசை செலவழித்தாவது இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவேன்

தனது தனிப்பட்ட பணத்தில் கிரிக்கெட் விளையாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிரிக்கெட் தடைக்கு அஸ்திவாரம் இட்டவர்களை கண்டறிய விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஒரு நாட்டை காட்டிக்கொடுத்து, தம்மைப் பாதுகாக்க யாராவது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு எதிரகா ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். கிரிக்கெட்டை கட்டமைக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது தனிப்பட்ட பணத்தை செலவழித்துவிட்டு நீதிமன்றத்திற்கு செல்வேன்’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles