Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைபர் தாக்குதல் தொடர்பில் மாதாந்தம் 3,000 புகார்கள்

சைபர் தாக்குதல் தொடர்பில் மாதாந்தம் 3,000 புகார்கள்

இணையத் தாக்குதல்கள் (ஹேக்கிங்) குறித்து புகாரளிக்க மாதாந்தம் 3,000க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் கிடைப்பதாக Cert Sri Lanka Computer Emergency Response Forum தெரிவித்துள்ளது.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (09) நடைபெற்ற இணையப் பாதுகாப்பு தொடர்பான ஊடக விழிப்புணர்வு செயலமர்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் 25-30 பேர் வந்து முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இ-மெயில் மூலம் பெறப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் நிரோஷா ஆனந்த தெரிவித்தார்.

மேலும், 2022ல் இலங்கையில் 40,000 சைபர் தாக்குதல்களும், 2023ல் 60,000 சைபர் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles