Friday, January 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று ஹிக்கடுவ – வெவெல்கொட கடல் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

57 வயதான குறித்த நபர் மேலும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று பிற்பகல் அப்பகுதியில் டைவிங் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், நீரில் மூழ்கும் போது ஏற்பட்ட உபாதை காரணமாக கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 57 வயதான போலந்து நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles