Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கவில்லை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

கசினோ உரிமையாளர்கள் எவருக்கும் எந்தவிதமான வரிச்சலுகையும் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் வருமானத்தில் 70% வரியாக செலுத்த வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று காலத்தில் அறவிடப்படும் வரித் தொகையை குறைக்குமாறு பல கசினோ உரிமையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கசினோக்கள் எந்தவித விதிமுறைகளும் இல்லாமல் இயங்கி வந்தன, ஆனால் அவை இந்த ஆண்டு முதல் விதிமுறைப்படி செயற்படத் தொடங்கியுள்ளன.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சூதாட்ட வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது 5 வருடங்களுக்கு பதிவு கட்டணமாக 500 மில்லியன் அறவிடப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles