Wednesday, May 14, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்து தீக்கிரை

ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்து தீக்கிரை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.

இந்த தீயினால் பேருந்த முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து தீப்பிடிப்பதற்கு முன் ஆரையம்பதி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – பொத்துவில் பாதையில் இயங்கும் பேருந்தொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு பஸ் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது.

அதன்படி பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகர சபையினரும் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அதற்குள் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரஹீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேருந்தின் பெறுமதி ஒரு கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles