பிரதான மார்க்கத்தின் ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் கினிகம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.
இதன்படி, கினிகம ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள், அல்லது அதன் ஊடாக பயணிக்கும் ரயில் சேவைகள் தாமதமாகும்.
எவ்வாறெனினும் தண்டவாளத்தில் முறிந்து வீழ்ந்த மரத்தை அங்கிருந்து அகற்றுவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.