ஒஹியவத்த சுற்றுலா பங்களா அமைந்துள்ள பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானது.
வெளிநாட்டு சுற்றுலா தம்பதியரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டு தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டி ஒஹியவத்த சுற்றுலா பங்களாவிற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வெளிநாட்டு தம்பதியினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து முச்சக்கரவண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.
ஒஹியவத்த சுற்றுலா பங்களாவில் தம்பதியினர் தங்கியிருந்துள்ளதுடன், விபத்தின் பின்னர் தம்பதியினர் முச்சக்கர வண்டியை அதே இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
அதற்கமைய, பிரதேசவாசிகள் ஹப்புத்தளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.