கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நிர்மாணிப்பதற்கும் 553 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் (DFC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.