கொழும்பில் மூன்று மாத டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘கொழும்பில் நாங்கள் நடத்திய சோதனையின் மூலம், கொழும்பு நகரவாசிகள் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமது வளாகங்களை மிகச் சிறப்பாக வைத்துள்ளனர் என்பது எமக்கு தெரியவந்தது. ஆனால் கட்டுமான இடங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்கள், அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் மத வழிபாட்டு இடங்கள் ஆகியவை 70% க்கும் அதிகமான டெங்கு பரவும் வளாகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.