2,763 கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.