காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
காசல்ரீ நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்ததையடுத்து சனசமூக மண்டபத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – திக் ஓயா சமரவல்லி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வரும் இவர் மது அருந்துவதற்காக வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் வீடு திரும்பாத நிலையில், ஹட்டன் பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.