அதி சொகுசு கப்பலான ‘M.V. Aida Bella’ நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பலில் 1,900 பயணிகளும், 730 பணியாளர்களும் உள்ளனர்.
ஜேர்மனியின் ‘Aida Cruises’ என்ற நிறுவனம் இந்த கப்பலை இயக்குகிறது.
‘M.V. Aida Bella’ கப்பலின் 13 அடுக்குகளில் 1,025 விருந்தினர் அறைகள் உள்ளன.
இதில் 2500 பயணிகள், 750 பணியாளர்கள் வரை தங்கலாம்.