Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதகமான நிபந்தனைகளுடன் அதானியுடன் கைகோர்க்கும் மின்சார சபை?

பாதகமான நிபந்தனைகளுடன் அதானியுடன் கைகோர்க்கும் மின்சார சபை?

இலங்கைக்கு பாதகமான பல வர்த்தக நிபந்தனைகளுடன் இந்திய நிறுவனமான அதானியுடன் மின்சார கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக மின்சார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

மன்னார் மற்றும் புனரின் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பான அதானி நிறுவனத்தின் முன்மொழிவு கடந்த வெள்ளிக்கிழமை மின்சார அமைச்சுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, மின்சார கொள்முதல் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என்றும், ஒரு யுனிட் மின்சாரத்தின் விலை 14 சத அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்றைய நாண மாற்று விகிதத்தின்படி ஒரு யுனிட் மின்சாரத்தை 45.95 ரூபாவுக்கு மின்சார சபை வாங்க வேண்டும்.

தற்போதுள்ள காற்றாலைகளில் இருந்து ஒரு யுனிட் 13.13 ரூபா என்ற விலையில் மின்சாரம் வாங்குவது அதானி ஒப்பந்தத்தின் நிதி பாதகத்தை எடுத்துக்காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles