Tuesday, May 13, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரம் குறைந்த டீசல் விநியோகம் - மறுக்கிறது அரசாங்கம்

தரம் குறைந்த டீசல் விநியோகம் – மறுக்கிறது அரசாங்கம்

தரம் குறைந்த டீசல் கையிருப்பு சந்தையில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

டீசல் கையிருப்பின் தரம் குறித்து சில அவதானிப்புகள் உள்ளன. அவற்றின் மாதிரிகள் இன்னும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மாதிரிகள் உரிய தரத்தை பூர்த்தி செய்யத் தவறினால், அவை சந்தைக்கு வெளியிடுவதற்கு முன்னர் முற்றாக நிராகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரம் குறைந்த டீசல் விநியோகிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டியதையடுத்து அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles