கொரிய சர்வதேச ஏஜென்சி (KOICA) ஆதரிக்கும் நாடுகளில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கொரிய பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார்.
கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் கொரியாவின் தலைநகர் சியோலில் நேற்று (06) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், கொரியாவில் பணியாற்றுவதற்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கொரிய நிறுவனமொன்றின் ஊடாக வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்க அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.
இலங்கையில் கொரிய முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பொருளாதார கூட்டு ஆணைக்குழுவை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.