இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அர்ஜுன ரணதுங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏதேனும் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கத் தயார் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.