Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு18 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

18 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 18 பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிரித்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்தார்.

தெதுறு ஓயா, தபோவ, ராஜாங்கனை, யான் ஓயா, வெஹெரகல உள்ளிட்ட 18 பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்தார்.

மேலும், நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 50% வரை அதிகரித்துள்ளதுடன், 15 இலட்சம் ஏக்கர் அடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles