நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதியினூடாக செல்லும் வீதிகளில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.