எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், இம்மாதம் இருக்கும் விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் குழு நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இம்மாதத்தில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு இருக்காது எனவும், முன்பு இருந்த விலையிலேயே எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது.