வவுனியா, வேலங்குளம் குஞ்சுக்குளத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்ததில் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வேலங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன் போது 5 பேர் கைது செய்யப்பட்டடுள்ளதுடன், அங்கிருந்து இரு உள்ளூர் துப்பாக்கிகளும், 52,500 மில்லிலீற்றர் கசிப்பு, 1,800 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
