ஹமாஸ் தாக்குதலில் பணயக் கைதியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுஜித் பண்டார என்ற நபரே இவ்வாறு பணயக்கைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக அவர் இருந்ததாக முன்னர் சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் அவர் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேலிய தூதுவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.