பதுளையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை பல்லேகெலே பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 6 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பதுளை பல்லேகெலே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.