இறக்குமதி செய்யப்படும் சீனி வரி அதிகரிப்பினால் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான வரியை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 ரூபாவாக உயர்த்த நிதியமைச்சு தீர்மானித்தது.
வரித் திருத்தத்துடன், இன்று (02) காலை நிலவரப்படி சந்தையில் சீனியின் விலை 300 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.