கொழும்பு – புறக்கோட்டை 2ம் குறுக்குதெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே மேற்படி யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.