இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோல் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
தென்கொரியா இலங்கைக்கு வழங்கிய தொழில் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் காலநிலை மாற்றத்தைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் தீர்மானம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.