Saturday, March 28, 2026
27.2 C
Colombo
வடக்கு5,150 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

5,150 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று (01) இரவு 9 மணியளவில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

5,150 போதை மாத்திரைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளையும் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles