முச்சக்கரவண்டியில் வீழ்ந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபா பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
பணப்பையை கண்டெடுத்த பெண் அதனை அனுராதபுரம் தலைமை பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் பணப்பையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமது வீட்டிற்கு மின்சாதனங்களை கொள்வனவு செய்ய வந்தபோது பணப்பை தவறவிட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியான நேரத்தில் இவ்வாறான ஒரு நல்ல செயலை செய்ததற்காக குறித்த பெண்ணுக்கு பொலிஸார் தனது நன்றிகளை தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.