தற்போது காசா பகுதியில் சிக்கியுள்ள 17 இலங்கையர்களும் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (02) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தூதரகம் அறிவித்துள்ளதாகவும்இ இவர்களில் 15 பேர் இன்று (02) நண்பகல் 12.00 மணிக்குள் எகிப்துக்குள் நுழைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஇ ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.