காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கலால் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதான அவர் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவின்போது, காளான் சாப்பிட்ட வயோதிபர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உணவை எடுத்துக் கொண்ட மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், ‘நான் நேசித்த இவர்களை காயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை’ என குறித்த பெண் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.