24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
68,114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் 3631 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பு என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.