எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்தார்.
இன்று (1) காலை அம்பலாங்கொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்படி தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மூன்று தடவைகள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும்இ தமது தொழிற்சங்கம் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பொருளாதாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ருவன் தெரிவித்துள்ளார்.