பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு மேலதிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கழுத்து மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் கூறியது.
இச்சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த நீதிவான், குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.