சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் சுனில் சாந்தவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சுனில் சாந்த தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.