Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளநீருக்கான கேள்வி அதிகரிப்பு

இளநீருக்கான கேள்வி அதிகரிப்பு

இலங்கையில் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெங்கு அபிவிருத்தி சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

2022 ஆம் ஆண்டு 11 மில்லியன் செவ்விளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள செவ்விளநீரின் தொகை 14 மில்லியன் எனவும், இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles