Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் திபுல்வெவ பொலிஸார் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ‘ஷாரூக்’ என்ற நபர் எனவும், அவர் சிறுமிக்கும், அவரை கடத்திய இளைஞனுக்கும் அடைக்கலம் கொடுத்த உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை கட்டுகெலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கஹகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 27 வயதுடைய இளைஞன் குறித்த சிறுமியை பலவந்தமாக கடத்தி சென்றதாக அவரது பெற்றோர் திபுல்வெவ பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஷாருக் என்ற நபர் கைது செய்யப்பட்ட போதிலும், சிறுமியோ அல்லது சிறுமியை கடத்தியதாகக் கூறப்படும் 27 வயது இளைஞனையோ இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திபுல்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles