Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில்

பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக PHI தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள், ஏனைய செலவுகளின் அதிகரிப்பு காரணமாக தற்போதைய கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை.

அதனால், அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெரும்பாலான PH Iக்கள் சேவையில் இருந்து விலகினாலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles