Thursday, August 7, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசு செரிய பேருந்து சேவைக்காக நடுத்தர வயது சாரதிகள்

சிசு செரிய பேருந்து சேவைக்காக நடுத்தர வயது சாரதிகள்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையான சிசு செரியவுக்கு இனி நடுத்தர வயதினரை மட்டுமே ஓட்டுனர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சில இளம் சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதை அவதானித்துள்ளதாகவும், எனவே சிறுவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு டிப்போ அத்தியட்சகருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முறையான பயிற்சி மற்றும் அனுபவமுள்ள சாரதிகள் மற்றும் உதவி சாரதிகளை சேவையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த சாரதிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles