ஒக்டோபரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 செப்டெம்பரில் 1.3% ஆக இருந்த பிரதான பண வீக்கம், ஒக்டோபரில் 1.5% ஆக உயர்ந்துள்ளது.
உணவு பணவீக்கமானது செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி -5.4% ஆக காணப்படுகிறது.
செப்டெம்பரில் உணவு அல்லாத பண வீக்கம் 4.7% ஆக இருந்தது.
அது ஒக்டோபரில் 4.9% ஆக அதிகரித்துள்ளது.