Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாசகர் படுகொலை: சந்தேக நபர் கைது

யாசகர் படுகொலை: சந்தேக நபர் கைது

ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக நின்றிருந்த யாசகரை தீ வைத்து கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்றிரவு (29) ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயில் கருகிய பிச்சைக்காரனை அயலவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை அவர் உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 27 வயதுடைய கலவிலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles